சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) (Music composer) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இளையராஜா கோலோச்சிய காலகட்டத்தில் திரை உலகில் இசையமைப்பாளராக தன் இசைப்பயணத்தை தொடங்கியவர் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த்.
1980ம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்தவர். நாணயம் இல்லாத நாணயம், சட்டம் ஒரு இருட்டறை, நான் அடிமை இல்லை உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
குறிப்பாக 1986ல் நடிகர் ரஜினி நாயகனாக நடித்து வெளியான நான் அடிமை இல்லை படத்தில் இடம் பெற்ற “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்” பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
இதனைத் தொடர்ந்து தமிழில் ஊருக்கு உபதேசம், வாய் சொல்லில் வீரனடி, காவலன் அவன் கோவலன் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க : vegetable price -உச்சத்தில் முருங்கைக்காய் – கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை
இந்த பாடல் மூலம் இசையமைபாளர் விஜய் ஆனந்த்திற்கு (Music composer) ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இவர் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன் கன்னட திரை உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தார். கன்னடத்தில் 100 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார்.
Nee Bareda Kadambari படத்தை இயக்கிய இயக்குனர் துவாரகீஷ் இசையமைப்பாளர் விஜயானந்தை தமிழ் திரை உலகிற்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்.
விஜய் ஆனந்த் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (பிப். 6) மாலை சென்னையில் உயிர் இழந்தார்.
இதையும் படிங்க : Caste Wise Census-முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி அழுத்தம் கொடுக்க வேண்டும்..!
அவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஜய் ஆனந்த் மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.