பிரபல ஹாலிவுட் நடிகர் ஆலன் அர்கின் (alan arkin) காலமானார். இவருக்கு வயது 89. கடந்த 2019ம் ஆண்டில் “ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்”-ல் ஆலன் ஆர்கின் கௌரவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
70 ஆண்டுகளாக மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த ஹாலிவுட் நடிகர் ஆலன் அர்கின் (alan arkin) “லிட்டில் மிஸ் சன்ஷைன்” படத்தில் மூர்க்கத்தனமான தாத்தாவாக நடித்ததற்காக ‘ஆஸ்கார்’ மற்றும் ‘பாஃப்டா’ விருதை வென்றிருந்தார்.
இந்நிலையில், ஆலனின் மறைவு செய்தியை அவரது மகன்களான ஆடம், மேத்யூ மற்றும் அந்தோணி ஆகியோர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், எங்கள் தந்தை ஒரு கலைஞராகவும் மனிதராகவும் இயற்கையின் தனித்துவமான திறமையான சக்தியாக இருந்தார் என தங்களின் தந்தை மறைவு குறித்து தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கில் பிறந்த ஆலன் ஆர்க்கின் 2015 முதல் 2016 வரை போஜாக் ஹார்ஸ்மேன் என்ற அனிமேஷன் தொடரில் ஜேடி சாலிங்கருக்கு குரல் கொடுத்தார். நடிகர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பல துறைகளில் கோலோச்சியுள்ளார்.
தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய ஆர்க்கின் 1960ல் சிகாகோவிற்கு குடிபெயர்ந்த நிலையில், அவரது நடிப்பு வாழ்க்கை பிராட்வேயில் தொடங்கியது. 1963ல் என்டர் லாஃபிங் நாடகத்தில் அறிமுகமான அவருக்கு சிறந்த நடிகருக்கான டோனி விருதை பெற்று தந்தது.
தொடர்ந்து ஆர்க்கின் 1966ல் இன் தி ரஷியன்ஸ் ஆர் கம்மிங், தி ரஷியன்ஸ் ஆர் கம்மிங் மற்றும் தி ஹார்ட் இஸ் எ லோன்லி ஹண்டர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும், இந்த இரண்டு படங்களும் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
அதன் பின்னர் நகைச்சுவைக்காக ‘கோல்டன் குளோப் விருதை, வென்ற நிலையில், ஆலன் அர்கின் தனது 89வது வயதில் காலமானார்.