பாஜக எம்.எல்.ஏ-வை மேடையில் ஏறி அறைந்த விவசாயி..! – வைரலாகும் வீடியோ

உத்தர பிரதேசத்தில் உன்னாவ் சர்தார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பங்கச் குப்தாவை மேடை ஏறி பலரின் முன்பு விவசாய சங்கத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் கண்ணத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

உத்தர பிரதேசத்தில் உன்னாவ் சர்தார் தொகுதி பாஜக எம்.எல்.ஏ கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில்,திடீரென ஒரு வயதான விவசாயி மேடையில் ஏறி வந்து அந்த எம்.எல்.ஏ-வை தலையின் அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனமான NDTV கூறும்போது, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தை சாதகமாக பயன்படுத்துவதாக கூறியுள்ளது.

மேலும் சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்; “பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் ஒரு விவசாயி பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தாவை அறைந்தார்” என்று அக்கட்சி இந்தியில் ட்வீட் செய்துள்ளது. பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் பயங்கரமான கொள்கைகள், ஆட்சி, சர்வாதிகாரம் ஆகியவற்றின் மீது அறையப்பட்டதாகும்;எம்எல்ஏவை நோக்கி அல்ல என சமாஜ்வாடி கட்சி டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உன்னாவ் சர்தார் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வை அறைந்த அந்த விவசாய சங்க தலைவர் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் மகனை போன்று பாசமாக கைவைத்து கேள்வி கேட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த அந்த வீடியோவில், எம்.எல்.ஏ-வை வேகமாக தலையில் அடிக்கும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த விவசாயி  மிரட்டப்பட்டதால் இப்படி மாற்றி பேசியிருக்கிறார் என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

 

Total
0
Shares
Related Posts