பெங்களூரு மெட்ரோ ரயிலில் அழுக்கான உடை (Dirty) அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயி ஒருவர் பயணம் மேற்கொள்ள முயன்றபோது
அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு மேற்பார்வையாளர் தடுத்தி நிறுத்தி உள்ளார் .
பயணச் சீட்டு எடுத்துள்ளேன் தன்னை ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்குமாறு அந்த அதிகாரியிடம் கெட போது அவரது உடையை காரணம் காட்டி அந்த விவசாயியை வெளியில் அனுப்ப முயன்றுள்ளார்.
ரயிலில் பயணம் செய்ய முறையாக டிக்கெட் எடுத்தும் அழுக்கு உடையை காரணம் காட்டி அந்த விவசாயியை பயணம் மேற்கொள்ள
அனுமதிக்காத பாதுகாப்பு மேற்பார்வையாளரை சக பயணிகள் ஒன்று கூடி கண்டித்ததால், அந்த விவசாயிக்கு நீண்ட நேரத்திற்கு பின் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி காட்டு தீ போல் தற்போது பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக பெங்களூரு மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா? மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என பலரும் தங்களது கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
வெள்ளையர்களிடம் போராடி சுதந்திரம் பெற்ற நம் நாட்டில் இன்று அனைவர்க்கும் முழு சுதந்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் பாரத நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் இன்னும் மிடில் கிளாஸ் சூழலில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த பாதியில் சிலர் நாம் வாழும் அதே நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கி ஏழ்மையான சூழலில் வாழ்ந்து வருகின்றனர் . அவர்களை தேடி போய் உதவி செய்ய பலரும் மனமில்லாமல் இருந்தாலும்.
இதுபோன்ற வறுமையில் இருக்கும் மக்களை (Dirty) எதோ வேற்றுகிரக வாசி போல் பார்க்காமல் இருந்தால் அதுவே அவர்களுக்கு போதுமானது.
Also Read : https://itamiltv.com/pmtn-prime-minister-modi-is-coming-to-tamil-nadu-today/
இன்று இருக்கும் சூழலில் யார் மேலே செல்கிறார் யார் கீழே செல்கிறார்கள் என யாராலும் கணிக்க முடியலில் நிலை உள்ளது . கண்ணிமைக்கும் நேரத்தில் யார்க்கு எதுவேனாலும் நடக்கலாம் .
எனவே அனைவரும் சற்று மனிதநேயத்துடன் இருந்தால் இந்த நாடு இன்னும் விரைவாக வல்லரசு என்ற நோக்கத்தில் பயணிப்போம்.