ராமநாதபுரம்: பார்த்திபனூர் மதகணையின் இடது பிரதான கால்வாயில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி.அடைந்துள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/12/image-10.png?resize=1024%2C576&ssl=1)
1975ல் வைகை ஆற்றின் குறுக்கே கலைஞர் கருணாநிதியால் மதகு அணை கட்டப்பட்டது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து 43 கி.மீ நீளமுள்ள வலது பிரதான கால்வாய் மூலம் 154 கண்மாய்களும், 45 கி.மீ நீளமுள்ள இடது பிரதான கால்வாய் மூலம் 87 கண்மாய்களும் பாசன வசதி பெற்று வருகிறது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/12/image-11.png?resize=1024%2C576&ssl=1)
இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டதில் இருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், ₹52.50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/12/image-9.png?resize=1024%2C576&ssl=1)
இந்நிலையில் தற்போது வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தடையின்றி கால்வாய்க்கு சென்று, 48 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசயிகள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.