சேலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மகனின் அவலநிலையை கண்டு மன உளைச்சலுக்கு ஆளான நபர் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்..
சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன். கன்னங்குறிச்சியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகன் திலக் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் சாய் பிரசாந்த் என்ற 6 வயதில் மகனும் உள்ளனர்.
இவர்களது மகன் சாய் கிரிசாந்த்(6) வாய் பேச முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் அடிக்கடி உலல்நிலை சரியில்லாமலும் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளான திலக் தனது தந்தை சிவராமன், தாய் வசந்தா, மனைவி மகேஸ்வரி, மகன் சாய் பிரசாந்த் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, திலக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் வசந்தா அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய நிலையில் தந்தை சிவராமன், மனைவி மகேஸ்வரி, மகன் சாய் பிரசாந்த் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார், தாய் வசந்தாவை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, உயிரிழந்த திலக் , தந்தை சிவராமன், மனைவி மகேஸ்வரி, மகன் சாய் பிரசாந்த் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மன உளைச்சலால் திலக் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.