நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த 14ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு முதல் பயணமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது .
தொடக்க நாளை ஒட்டி ஒருநாள் மட்டும் கட்டணம் ₹3000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு 35 பயணிகள் இலங்கை சென்றடைந்தனர்.
இந்நிலையில் நேற்று தொடங்கப்பட்ட நாகை – இலங்கை இடையேயான சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .
மேலும் நாகை துறைமுகம் – இலங்கை காங்கேசன் துறைக்கு இனி திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.