22 வது கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக லீக் சுற்று போட்டிகள் நடந்து முடிந்தள்ளன. இதில் மொத்தமாக 16 அணிகள் தகுதி பெற்று அடுத்த சுற்றான சூப்பர் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நாக் அவுட் சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த சுற்றின் முடிவில் குரேஷியா, பிரேசில், அர்ஜன்டினா, போர்ச்சுகல், நெதர்லாந்து, மொரோக்கோ, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த சுற்றில் வெல்லும் 4 அணிகள் அடுத்து சுற்றான அரை இறுதிக்கு செல்லும். நாளை முதல் காலிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளன. நாளை நடக்கும் முதல் காலிறுதி போட்டியில் பிரேசில் – குரேஷியா அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டியை தொடர்ந்து டிசம்பர் 10 தேதி அர்ஜன்டினா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. அதே நாளில் மொரோக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலபரீட்சை செய்கின்றன. 11 தேதி இங்கிலாந்து – பிரான்ஸ் மோதுகின்றன. காலிறுதி சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், பிரேசில், அர்ஜன்டினா அணிகள் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக உலக புகழ் பெற்ற கால் பந்து வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோரின் அணிகள் காலிறுதிக்குள் விளையாடுவதால் இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்ற ஆவலும், எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. ஜம்பவானான மெஸ்ஸி, ரொனால்டோவிற்கு இது கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் அவர்கள் கோப்பையை வெல்லவார்களா என்று அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டிசம்பர் 14,15 ஆகிய நாட்களில் அரை இறுதி போட்டியும், 18 ஆம் தேதி இறுதி போட்டியும் நடைபெறும்