‘மெய்யழகன்’ படக்குழுவினருக்கு 70-ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினர் சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. இந்த படம் கடந்த செப்-27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படத்தின் கதாநாயகனாக கார்த்தியும், முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள்ளார். இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யாவும், தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மெய்யழகன் படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இன்னும் குறையாமல் உள்ளது.
இந்நிலையில், ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார். இந்த நிகழ்வு கடந்த 05-10-2024 சனிக்கிழமை மாலை சென்னை, கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இதையும் படிங்க : தமிழகத்தின் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!
அவ்விழா நிறைவுரும் வேளையில், ‘மெய்யழகன்’ பட பெருவெற்றிக்கு காரணமான நடிகர்கள் கார்த்தி, அர்விந்த்சாமி, தயாரிப்பாளர் 2d -ராஜசேகர், இயக்குனர் பிரேம்குமார், வினியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்கள் ஐந்து பேருக்கும் 70-ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில்,
கெளரவ தலைவர் ‘கலைமாமணி’ நெல்லை சுந்தர்ராஜன், தலைவர் D.R. பாலேஷ்வர், செயலாளர் R.S. கார்த்திக் @ கார்த்திகேயன், துணைத்தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம், இணை செயலாளர் மதிஒளிகுமார் , செயற்குழு உறுப்பினர் Kural TV -மோகன் உறுப்பினர் ஐ தமிழ் -பாலா உள்ளிட்டோர் அழகிய கைத்தறி துண்டுகளை அணிவித்தனர்.
‘மெய்யழகன் ‘ படத்தை தயாரித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும் இரு தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதியினருக்கான சால்வையையும் நடிகர் கார்த்தியிடம் கொடுக்கப்பட்டது.
சில தவிர்க்க முடியாத சூழலால் அவர்களால் இவ்விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. மேலும், கார்த்தி அவர்களிடம் கொடுக்கப்பட்ட சால்வையை அவரது அண்ணன் – அண்ணியிடம் சேர்த்து விடும்படி சினிமா பத்திரிகையாளர் சங்க செயலாளர் திரு. ஆர்.எஸ். கார்த்திக் @ கார்த்திகேயன் கேட்டுக் கொண்டது ‘மெய்யழகன்’ படக்குழுவினரை மெய்சிலிர்க்க வைத்தது.
தொடர்ந்து ‘மெய்யழகன்’ மாதிரியான நல்ல படங்களை 70 – ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கமும் அதன் நிர்வாகிகளும் தொடர்ந்து இதுபோன்று கௌரவித்து வருவதை சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் அவர்கள் மேடையிலேயே பாராட்டினார்.