கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் உள்பட 20 பேர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு (Fir against TVK) செய்யப்பட்டுள்ளது.
தமிழ வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை, பனையூரில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும்,
இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் தயாரிக்கும் போதும், பயன்படுத்தும் போதும்,
கட்சித் தலைமையால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தலைமை அறிவுறுத்தியது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் உள்பட 20 பேர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு (Fir against TVK) செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் கொடிக்கம்பங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக கொடிக்கம்பங்கள் வைக்க காவல்துறை உள்ளிட்டோரிடம் அனுமதி வாங்க வேண்டும்.
ஆனால் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைத்து நேற்று கொடியேற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறை, வருவாய்த்துறையினர் சென்று கொடிக்கம்பங்களை அகற்றி உள்ளனர்.
மேலும் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்ததாக கொடியேற்றியதாக கூறி மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி உள்பட 20 பேர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.