பாஜக பெண் தொண்டருக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது டெல்லி மண்டாவாலி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக டெல்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எனது குரலை ஒடுக்கப்பார்க்கிறார்கள்.
சி.பி.ஐ., வருமானவரி, அமலாக்கத்துறை போன்றவற்றை எனக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது எனபதால், எனது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது. நான் பாராளுமன்ற உறுப்பினர். என் மீது பொய் புகார்களை பதிவு செய்ய சிலரை ஊக்குவிக்கின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார்