நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தபோது கொடூரம்.. – கண் இமைக்கும் நேரத்தில் இளைஞர் சுட்டுக்கொலை..!

திண்டுக்கல் மாவட்டம் செட்டிகுளத்தில் காண்டிராக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்து உள்ளார். இவருடைய மகன் ராகேஷ் குமார்(26) . இவர் நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த ராக்கேஷ் குமார் என்பவர் அதே பகுதியில் இருக்கக்கூடிய செட்டிகுளம் மீன் பிடிக்கும் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

குளம் ஏலம் எடுப்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் இவருக்கு முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்றிரவு ராக்கேஷ் குமார் தனது நண்பர்களுடன் செட்டிகுளத்தில் இருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் வயிற்றில் சுட்டும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ‌திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்கள் சேகரித்து வருகின்றன.

Total
0
Shares
Related Posts