நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என ( nellai fishermen ) தமிழ்நாடு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி 16.05.2024 முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 45 கி.மீ வரை அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும் மற்றும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கையினை மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக அறிவிப்பு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ( nellai fishermen ) கரையை ஒட்டியுள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.