இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகள் திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து 2024-25ம் நிதியாண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் :
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹6,500-ல் இருந்து ₹8,000-ஆக உயர்வு.
மழைக்கால நிவாரணத் தொகை ₹3000-ல் இருந்து ₹6000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்.
புதுச்சேரி பிராந்திய அளவில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகை.
பாடப்பிரிவு வாரியாக 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்க ரூ.5,000 ஊக்கத்தொகை.
காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.