திருச்சி அருகே கஞ்சா போதையில் கோஷ்டி மோதல், வெடிகுண்டு வீசிவிட்டு, தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்து தப்பியோட்டம் – பதட்டமான சூழ்நிலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் ஆய்வு.
திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சி சேர்ந்த புறா செல்வத்தின் மகன் மணிகண்டன், அங்கு மகன் வேலு, பங்கு சேகர் மகன் அப்பாஸ், கீரமங்கலத்தை சேர்ந்த காமராஜ் மகன் பரந்தாமன் ஆகிய பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அகிலாண்டபுரத்தை சேர்ந்த செழியன் மகன் மித்திரன், காட்டுராஜா மகன் சுரேஷ் ஆகிய இருவருக்கும், பரந்தாமன் மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்று கஞ்சா போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரந்தாமன் உள்ளிட்ட 4பேரும், மித்ரன், சுரேஷ் ஆகிய இரு தரப்பினர்களிடையே கஞ்சா போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன், வேலு, பரந்தாமன், அப்பாஸ் ஆகிய 4பேரும், சேர்ந்து சுரேஷ், மித்ரனை அறிவாளால் வெடிகுண்டை வீசிவிட்டு, அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்தில் படுகாயம் அடைந்த சுரேஷ், மித்திரன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் லால்குடி சராக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில் தனிப்படையை அமைக்கப்பட்டு தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.