தெற்கு பிரேசிலில் ஏற்பட்ட புயல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரேசில் நாட்டை கடந்த திங்கள்கிழமை இரவு பெரும் புயல் தாக்கியதில், அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்டே உசுல் மாகாணம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் ஏற்பட்ட இந்த புயல், கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்தனர்,
இதில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் மீண்டும் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 2300 பேர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.