தைவான் (Taiwan) தலைநகர் தாய்பேயில்ஒரு உணவு விடுதியில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள புதிய உணவு வகை ஒன்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.14 கால்களை கொண்ட கிளிஞ்சல் பூச்சி உணவு தான் அது.
பொதுவாக கரப்பான் பூச்சி உள்ளிட்ட பல்வேறு வகை பூச்சிகளை வறுத்து சாப்பிடும் சீனர்களை போலவே, தாய்ப்பே மக்களும் பூச்சி உணவுகளை விரும்பி உண்கின்றனர்.
இதில் தற்போது 14 கால்களை உடைய கிளிஞ்சல் பூச்சியும் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள ராமென் என்ற பெயருடைய உணவகத்தில் தான் இந்த பூச்சி உணவு கிடைக்கிறது.
கடந்த 22 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கிளிஞ்சல் பூச்சி உணவு தற்போது தாய்ப்பே நகர மக்களிடம் வெகுவாக பிரபலமடைந்துள்ளது. நூடுல்ஸ் மற்றும் பிறவகை உணவுகளுடன் இந்த பூச்சியை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
சிக்கன் மற்றும் மீன் இறைச்சியுடன் இந்த கிளிஞ்சல் பூச்சியையும் அவர்கள் வேக வைத்து கொடுக்கின்றனர். இதனை ருசிக்கும் வாடிக்கையாளர்கள் கிளிஞ்சல் பூச்சிகளை “சோ க்யூட் ” என்று வர்ணிக்கின்றனர்.