அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுவுக்கு தமிழக முன்னாள் முதலமைச்சரும் (EPS condolence) அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து இ.பி.எஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
Also Read : https://itamiltv.com/actors-arthi-and-ganesh-joined-bjp-led-by-annamalai/
அண்ணன் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து புரட்சித் தலைவர் அமைச்சரவையில் அமைச்சராகவும்: அதே போல், மாண்புமிகு அம்மா அவர்கள் காலத்தில் கழக இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், (EPS condolence) உற்றார் உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .