RM Veerappan passed away : தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று காலமானார்.
உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன். அதிமுக கட்சி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 98.
இதையும் படிங்க : காங்கிரஸின் சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி மோசடி : ராமதாஸ் விமர்சனம்!!
1977 முதல் 1986ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன், 1986ல் நெல்லை சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
எம்.ஜி.ஆர்-ஐ வைத்து படங்களைத் தயாரித்து பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த ஆர்.எம்.வீரப்பன், ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தைத் தயாரித்தவர்.
இந்த சூழலில், வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மரணத்திற்கு RM Veerappan passed away, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரச்சார விவரம்!