சென்னையில் நடைபெற ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையறையின்றி ஒத்திவைப்பு..!!

Spread the love

சென்னையில் நடைபெற இருந்த ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் வரும் டிச. 9,10 ம் தேதிகளில் , தெற்காசியாவின் முதல் ஃபார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தையன்களாக நடைபெற இருந்தது .

இந்த பந்தையத்திற்கான டிக்கெட்டுகள், விற்பனை மற்றும் முன்பதிவு செய்வதறகான வழிமுறைகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது .

இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற இருந்த இந்த பார்முலா 4 கார் பந்தயம் மிக்ஜாம் புயல் காரணமாக டிச 15 , 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது .

இதற்காக சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், எந்த தேதியும் குறிப்பிடாமல் இந்த கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Related Posts