அதிமுக ஆட்சிக்காலத்தில் மோசடியில் ஈடுபட்ட 3 சிறை அதிகாரிகள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களில் போலி ரசீது தயாரித்து, 2016 முதல் 2021 வரை ரூ.1.63 கோடி மோசடி செய்த வழக்கில் சிறைத்துறை எஸ்.பி., ஏடிஎஸ்பி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Also Read : கடன் சுமையை உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை – வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!!
மோசடி நடந்த காலகட்டத்தில் மதுரை சிறையில் பணியாற்றிய, புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்த அதிகாரிகள் ஆதிமுகாவின் ஆட்சிக்காலத்தில் மோசடியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.