பெங்களூருவில் (Bengaluru) அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடித்து அதிக இடங்களை கைபற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.இந்த நிலையில்,தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு சக்தி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டதால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. முன்னதாக சக்தி திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது.ஆனால் அரசு போக்குவரத்து துறை கோரிக்கை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,சக்தி திட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடதக்கது.