டெல்லி ராஜ்கோட் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு ஜி-20 மாநாட்டில் (G20 Summit) பங்கேற்க வந்துள்ள உலக தலைவர்கள், இன்று காலை மரியாதை செலுத்த வந்தனர்.
காந்தி நினைவிடத்திற்கு வந்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ், கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ, துருக்கி அதிபர் எர்டோகன், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்ஜி லவ்ரோ,
சீன பிரதமர் லி குவாங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை பிரதமர் மோடி கதர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
மேலும், காந்தி நினைவிடத்தில் இருந்த சபர்மதி ஆசிரமத்தின் மாதிரி குறித்து உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தினர்.
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.