விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசாவுடன் இணைந்து ககன்யான் வீரர் ஒருவர் விரைவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்
‘ககன்யான்’ திட்டத்துக்கு இந்திய விமானப்படை விமானிகள் 4 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த 4 வீரர்களும் ரஷ்யாவில் விண்வெளிப் பயணத்திட்டப் பயிற்சியை முடித்துள்ளனர்.
இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொள்கிறது. இதற்காக ‘ஆக்ஸிஓம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் விண்கல ஒப்பந்தத்தில் இஸ்ரோ கையெழுத்திட்டுள்ளது.
Also Read : தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது..!!
விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வரும் இரு மாதங்களில் புறப்படும். இதில் ககன்யான் வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் மேற்கொள்வார். மீதமுள்ள மூவரும் ககன்யான் விண்கலம் தயாரானவுடன் அதில் விண்வெளி பயணம் மேற்கொள்வர்.
விண்வெளியில் 400 கி.மீ., உயரத்தில் சுற்றுவட்டப் பாதையில் 3 நாள் பயணம் மேற்கொண்டு பூமி திரும்புவர்.
ககன்யான் விண்கலத்திற்கான சி32 கிரையோஜெனிக் என்ஜின் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
ககன்யான் திட்டம் 2025ம் ஆண்டு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.