தனது அண்ணனே தனக்கு விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி செய்ததாக நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த் திரை உலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரை உலகில் வில்லனாக தனக்கென மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் பொன்னம்பலம். ஸ்டண்ட் நடிகராக வாழ்க்கை தொடங்கிய பொன்னம்பலம் நாட்டாமை படத்தின் மூலம் பிரபலமாக வில்லனாக மக்கள் மத்தியில் உயர்ந்தார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னனி நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாகத் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் உதவி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனை அடுத்து சரத்குமார் கமல் சிரஞ்சீவி தனுஷ் அர்ஜுன் விஜய் சேதுபதி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா உள்ளிட்டோர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்குச் சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பொன்னம்பலம் தற்பொழுது உடல்நிலை தேறி உள்ளார். மேலும் பொன்னம்பலத்தின் சிறுநீரகப் பிரச்சனைக்குக் காரணம் குடிப்பழக்கங்கள் தான் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வந்தனர். இதுகுறித்து பொன்னம்பலம் ஒரு youtube சேனலுக்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், அஜித் விஜய் விக்ரம் எல்லோரும் எனது உடல் நலத்தைப் பற்றி விசாரிக்கவில்லை.. நடிகர் அஜித்தை எனக்குச் சொந்த தம்பி என்று நினைத்திருந்தேன். அவர் எனக்கு தொலைப்பேசி செய்து உடல்நலத்தை விசாரிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவர் இதுவரை எந்தவித அழைப்பையும் அவர் செய்யவில்லை என வருத்தமாகத் தெரிவித்து இருந்தார்.
மேலும் சிறுநீரகம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதன் காரணமாகத் தான் எனக்குச் சிறுநீரக இழப்பு ஏற்பட்டதாகப் பல நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மை இல்லை என்றும் எனது தந்தைக்கு நான்கு மனைவிகள் உள்ளன.
நான்காவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவன் தான் நான். நான்கு மனைவிகளின் பிள்ளைகளும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் மூன்றாவது மனைவியின் மகன் தான் தனக்கு மேலாளராக இருந்து வந்ததாகத் தெரிவித்தார். தனது அண்ணன் மேல் அதிக நம்பிக்கை வைத்ததாகத் தெரிவித்த அவர்,
ஒரு கட்டத்தில் தனக்கு ஸ்லோ பாய்சன் வைத்தது தெரியவந்தது. தனது சகோதரனே எனக்கு இப்படி செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சிறுநீரகம் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தியதன் காரணமாகத் தான் எனக்குச் சிறுநீரக இழப்பு ஏற்பட வில்லை என தெரிவித்துள்ளார்