Gandhi Memorial Day –காந்தி நினைவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கே.என்.நேரு உள்ளிட்டோர் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு :
அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தும் வகையில் மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை!
இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற அண்ணல் காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.
‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.
அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை ‘சுவச்ச பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள்.
இதையும் படிங்க:CM Stalin official-”Surprise in the skies” ஜோகோவிச்சுடன் ஒரு க்ளிக்!
இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ஆம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதை தமிழ்நாடு அரசு தடுத்தது!
மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக்
கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்”இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ,காந்தி நினைவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கே.என்.நேரு உள்ளிட்டோர் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1752201948206706885?s=20
அமைச்சர் உதயநிதி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காந்தி நினைவு நாளான(Gandhi Memorial Day) இன்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர். திமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுதி மொழி நிகழ்வில் பங்கேற்றனர்.
அப்போது காப்போம் காப்போம்!
மனித நேயம் காப்போம்!
விலக்குவோம் விலக்குவோம்!
மதவெறியை விலக்குவோம்!
காப்போம் காப்போம்!
வேற்றுமையில் ஒற்றுமை காப்போம்!
விலக்குவோம்! விலக்குவோம்!
நமக்குள் உள்ள பிளவுகளை விலக்குவோம்!
வேரறுப்போம் வேரறுப்போம்!
மதவெறி சக்திகளை வேரறுப்போம்!
வேரறுப்போம் !வேரறுப்போம்!
பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம்!
பிறப்பொக்கும் என்பதே, நமது அறமாகும்.
யாவரும் கேளிர் என்பதே, நமது பண்பாகும்.
வேண்டும் வேண்டும்;
அமைதியான இந்தியா வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்