துணிக்கடையில் ரவுடி மாமுல் தரவில்லை என்பதால் அடியாட்களை வைத்து தாக்கிய கும்பல்.
பணிபுரியும் ஊழியரை அழைத்து மற்றும் தாக்கம் சிசிடிவி காட்சிகள் இருந்தும் காவல்துறையினர் தயக்கம் காட்டுவது ஏன் பாதிக்கப்பட்டவருடைய கேள்வி?.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் விக்னேஷ் என்பவர் தொழில் செய்து வருவது 12 வருடமாகிறது இந்தப் பகுதியில் கடந்த எட்டு மாதமாக துணிக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நாகராஜ் என்பவர் பலமுறை குற்ற சம்பவம் தொடர்பாக சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. நாகராஜ் ஒரு கும்பலை வைத்து வாழக்கமாக ரவுடி மாமுல் எதிர்பார்த்து ஒவ்வொரு பண்டிகை காலம் இது போன்ற நாட்களில் மாமுல்லாக ஆடைகள் மற்றும் பணம் என்று வாங்கிச் சென்று வந்த நிலையில்,
விக்னேஷ் கடுமையாக பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக சுமைகள் மற்றும் மன உளைச்சலால் விக்னேஷ் தர முடியாத சூழ்நிலையில் வந்த நிலையில் நாகராஜிடம் தெரிவித்தனர்.
இதனால் நாகராஜ் என்பவர் ஆத்திரம் அடைந்து விக்னேஷ் இல்லாத நேரத்தில் இவருடைய துணிக்கடையில் நாகராஜ் உள்ளே பணிபுரியும் ஊழியரை அழைத்து சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பழைய வண்ணாரப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்காமல் காவல்துறையினர் டி வி ஆர் ஐ எடுத்துச் சென்றதால் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
அதன்பிறகு உதவி ஆணையர் ஆய்வாளர் பாதிக்கப்பட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் எங்களைத் தாக்கிய ரவுடிகள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் பகிரமாக குற்றச்சாட்டு வைக்கின்றன