வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதத்தின் முதல் நாளான இன்று ரூ.101.50 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணையின் விலை நிலவங்களுக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்த்தப்பட்டு ரூ.1,999.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.