ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜகவின் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரிலான பாத யாத்திரை தொடக்க விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை நேரடியாக காயத்ரி ரகுராம் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து காயத்ரியை நீக்கிய பிறகு அவர் மீதான கோபத்தால் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.அந்த வகையில் தற்போது அமித்ஷா, பாஜக மீது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி உள்ளது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,மணிப்பூரில் என்ன நடந்தாலும் அதன் மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் அது மிகவும் கொடூரமானது. பாரத் மாதா கீ ஜெய் சொன்னால் மட்டும் போதாது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி ஜி ஒரு வார்த்தை கூட பேசவில்லை..இது ஒவ்வொரு இந்திய குடிமகனையும் வேதனைப்படுத்துகிறது.என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜகவின் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரிலான பாத யாத்திரை தொடக்க விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் ,புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்திட அண்ணாமலை இந்த யாத்திரையை முன்னெடுத்துள்ளார்- அமித் ஷா
ஜெ அம்மாவுக்கும் எம்ஜிஆர் அய்யாவுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது இதுவே முதல் முறை. இது அதிமுகவுக்கு ஆபத்தானது. கட்சியை கைப்பற்றுவது என்பது நேரடியான அல்லது மறைமுகமான செய்தியாகும். நான் இதை எப்படி பார்க்கிறேன். முதல் அண்ணாமலை தன்னை ஜேஜே அம்மா மற்றும் எம்ஜிஆர் அய்யாவுடன் ஒப்பிட்டார். இப்போது அமித் ஷாஜி கூறுகிறார் ஜெஅம்மாவும், எம்.ஜி.ஆரும் தமிழகத்திற்குக் கொடுத்த ஏழைகளுக்கான திட்டங்களை அவர்கள் மக்களுக்குச் சொல்வார்கள். ஏன் என்ன நோக்கத்திற்காக? இது அதிமுகவின் சாதனையல்லவா? இப்போது கையகப்படுத்தி பிறகு அதை பாஜகவின் திட்டம் என்று சொல்வார்கள். நீங்கள் அனைவரும் இதை எப்படி பார்க்கிறீர்கள்? என தெரிவித்த அவர்,
ஒரு ட்வீட் பூகம்பத்தை உருவாக்கும் என்றால், ஏன் பாத யாத்திரை? செய்தியை ஒரு ட்வீட்டில் அனுப்பலாம். இந்த கோமாளியை தமிழ்நாட்டில் யாரும் அறிய விரும்பவில்லை, அவருடைய சுரண்டல் சேவை யாருக்கும் தேவையில்லை.
அண்ணாமலையின் ட்வீட்டைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே சிரிக்கும்போது அந்த அதிர்வு பூகம்பம் போல் தான் இருக்கும். யாரோ ஒருவர் தினமும் உங்களுக்கு தவறான தகவல்களைத் தருகிறார், அமித் ஷா ஜி. இந்த கோமாளி துண்டை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
|