பாஜக தலைவர் அண்ணாமலை பாதை யாத்திரையில் சாலையில் சூட்டை தணிக்க லாரி மூலம் 80,000 லிட்டர் தண்ணீர் சாலையில் விடப்பட்ட சம்பவத்திற்கு காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் திமுகவில் ஊழல் அரசியல் குறித்தும் பாஜகவில் 9 ஆண்டுகால சாதனையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதமாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் நடைபயணம் மேற்கொண்ட பொது வெயில் காரணமாக சாலை சூடாக இருந்ததால் லாரியில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு சாலையில் விடப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலையை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளதாவது:
அண்ணாமலை நடைபயணத்துக்காக 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வேஸ்ட். தினமும் 1/2 கிலோமீட்டர் நடக்க, 80,000 லிட்டர் தண்ணீர் வீணாகி, சாலையை குளிர்விப்பதற்காக தரையில் ஊற்றப்படுகிறது.

யார் இவ்வளவு பணம் ஸ்பான்சர் செய்கிறார்கள்? பாஜகவுக்கு இவ்வளவு பணம் எப்படி வருகிறது? அண்ணாமலைக்கு எப்படி இவ்வளவு பணம் வருகிறது? கமிஷன், ஊழல், வசூல் இல்லாமல் இவ்வளவு விலை உயர்ந்த பாவ யாத்திரை நடக்காது.
இவர் எப்படி தேச பக்தர் ஆக முடியும்? ஏழை மக்களை எப்படி காப்பாற்ற முடியும்? தண்ணீருக்காக எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகின்றனர் தெரியுமா? அவருக்கு தண்ணீர் பஞ்சம் தெரியுமா? அவருக்கு ஏதாவது தெரியுமா? அவர் மிகப்பெரிய ஆடம்பர முட்டாள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,5 அடியாள், தொண்டர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. அந்த 5 அடியாள் தான் பாவ யாத்திரையில் ஜிகிச்சிக்கா ஜிகிச்சிக்கா சிக்கா என்று மகிழ்ச்சியாக இருக்கிறான், ஆடம்பரமாக அனுபவித்து வருகின்றனர்.
பணம் மற்றும் பாட்டில்களுக்காக ஸ்டிங்காப்பரேஷனைப் போல மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ன செய்தி. பாவம் மற்றவர்கள் 50 போலீஸ், 12 இசட் செக்யூரிட்டிகள் பாவ யாத்திரையில் கூட்டமாக பார்க்கப்படுகின்றன, 80,000 லிட்டர் தண்ணீரை தரையில் வீணாக்குவதை பொதுமக்கள் பார்த்தார்கள் அவர்களது முகம் சுளிக்கின்றனர். இது மக்களை முட்டாளாக்குவது. யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.