தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2022/03/118136.webp?resize=800%2C400&ssl=1)
இதனை அடுத்து தேர்வுகள் நேரடியாக நடத்தப்படவே வாய்ப்பு அதிகம் இருப்பதால் மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்கும் முனைப்பில் ஆசிரியர்கள் வகுப்புகளை வேகமாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை செயலகத்தில் இன்று வெளியிடுகிறார்