26 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை.

goa night curfew amid corona surge

கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் என மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவத்தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியது. இந்த வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று குறைவடைந்து, கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் பரவல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்திய பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளையும் அதிப்படுத்தி உள்ளது. அத்துடன் பள்ளிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

goa-night-curfew-amid-corona-surge
goa night curfew amid corona surge

இந்நிலையில் மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, டெல்லி, கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து உள்ளிட்ட மாநிலகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts