காரைக்காலில் வீட்டு பூட்டை உடைத்து தங்க கிரீடம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலில் வசிக்கும் ரோஸ்மேரி அரியலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்கு ரோஸ்மேரி சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டில் கதவை உடைத்து 10 சவரன் தங்க கிரீடம் திருடப்பட்டது தெரியவந்தது.இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த ரோஸ்மேரி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.புகாரின் போரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.