தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை சற்று குறைந்து 4,340 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 56 ரூபாய் விலை உயர்ந்து 4,392 ரூபாய்க்கும், ஒரு சவரன் 448 ரூபாய் விலை அதிகரித்து 35,136 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 70 காசு விலை உயர்ந்து 63 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.