Gold smuggling : டெல்லி விமான நிலையத்தில் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (04.06.24) அன்று ஹாங்காங்கில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க : நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் தேதி மாற்றம் – எப்போது?
இந்த சோதனையின் போது 4 பயணிகள் தங்களுடைய உடைமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
தொடர்ந்து நடத்திய அதிரடி சோதனையில் அவர்களிடம் இருந்து ரூ.5.45 கோடி மதிப்புள்ள 8.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தல் (Gold smuggling) சம்பவத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 4 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.