இந்தியாவின் 77-வது ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி இன்று கூகுல் நெசவு தொழிலை மையப்படுத்தி டூடுலை வடிவமைத்துள்ளது.
நாடு முழுவதும் 77வந்து சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி பொது மக்களுக்கு உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து நாடுமுழுவதும் கல்லூரிகள் பள்ளிகள் வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் உலக தேடல் பொறியின் அரசன் என அழைக்கப்படும் கூகுளை நிறுவனம் சார்பில் இந்திய சுதந்திரத்திற்கான சிறப்பு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
புது தில்லியைச் சேர்ந்த கலைஞர் நம்ரதா குமார் GIF வடிவிலான டூடுல் அமைத்துள்ளார்.அதில் இந்தியாவில் நெசவு தொழிலை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு ஜவுளி கைவினை வடிவங்களை ஆராய்ந்து அடையாளம் கண்டுள்ளது.ஒவ்வொரு ஜவுளியிலும் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வண்ணங்களின் துல்லியமான பிரதிநிதித்துவம் அவற்றின் உண்மையான சாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முக்கியமானது என்று தெரிவித்துள்ளது
மேலும் இந்தியாவின் ஜவுளி மற்றும் தேசத்தின் அடையாளத்துடன் அவற்றின் ஆழமான தொடர்பைக் கெளரவிப்பதும் கொண்டாடுவதும் மிக முக்கியமான குறிக்கோளாக உள்ளது.
இந்தக் கலைப்படைப்பின் மூலம், இந்தியாவின் ஜவுளி மரபுகளின் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கலைப் புத்திசாலித்தனத்தை வெளிச்சம் விதமாக கூகுள் டூடுல் பிளாட்ஃபார்ம் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.