திருமணத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்ததால் கணவர் விவாகரத்து கோரியதாக மீரட்டில் பெண் ஒருவர் குற்றம் சாட்டி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டின் ஜாகிர் காலணி பகுதியில் வசித்து வருபவர் நஜ்மா .இவருக்கும் அதே பகுதியில் ஃபதேபூரில் வசிக்கும் சல்மானைக் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தம்பதிகளுக்கு மத்தியில் சண்டை நடந்ததாகத் தெரிகிறது. அதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சல்மான் நஜ்மாவை அவரின் அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டார். மேலும், நஜ்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார்.
கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டை வருவது இயல்பு .எனவே, கோபம் குறைந்து அவரே வந்து தன்னை அழைத்துச் செல்வார் என எதிர்பார்த்த நஜ்மாவுக்கு, இந்த விவாகரத்து நோட்டீஸ் பெரும் ஏமாற்றமாக இருந்திருக்கிறது. அதனால், இது தொடர்பாக மீரட்டில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில்,” திருமணம் ஆன புதிதில் நான் ஒல்லியாக இருந்தேன்.
ஆனால்,குழந்தை பெற்ற பிறகு தான் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு பருமன் ஆனேன் .அதனால், என்னைக் குண்டானவள் எனக் கணவர் அவமானப்படுத்தினார்.
மேலும், இதைக் காரணமாக வைத்து என்னைப் போன்ற ஒருவருடன் தன்னால் வாழ முடியாது எனக் கூறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில் “எனக்கு உடல் எடை அதிகரித்துவிட்டதால் என்னுடன் வாழ விரும்பவில்லை என்று அவர் என்னிடம் கூறினார்,” என்று நஸ்மா கூறினார். அந்த நபர் ஏற்கனவே விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், தான் இன்னும் கணவருடன் வாழ விரும்புவதாகவும், விவாகரத்து வேண்டாம் என்றும் நஸ்மா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மீரட்டில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. கணவரே திருமணத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்ததால் மனைவியை விவாகரத்து கோரியதாகச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது