அரசு போக்குவரத்து தொழிளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள நிலையில், மாற்று ஓட்டுநர்கள் (temporary drivers) வைத்து போலீசார் பாதுகாப்புடன் 90சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.30 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர்.
அதன்படி கோவை மண்டலத்திற்க்கு உட்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத தொழிற்சங்கத்தை சார்ந்த ஓட்டுநர், நடத்துனர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுநர்களின் (temporary drivers) பட்டியல் பெறப்பெற்று அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்களை வைத்து இயக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 23 பணிமனைகள் மூலம் மாற்று ஓட்டுநர்களை வைத்து சுமார் 1,250 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
சுமார் 90 சதவீத பேருந்துகள் காலை முதல் இயக்கப்பட்டு வருவதால் கோவை, உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://x.com/ITamilTVNews/status/1744604769891889191?s=20
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,
முதலமைச்சரின் உத்தரவின்படி முழுவீச்சில் பேருந்து இயக்கத்தை, போக்குவரத்து துறை செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நிதிச்சுமை காரணமாகவே தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர்.
போராடுவது உங்களுடைய உரிமை, ஆனால் மக்களுக்கு இடையூறு இன்றி போராட வேண்டும் என்று தான் சொல்கிறோம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன.
இதையும் படியுங்க : https://itamiltv.com/minister-anbil-mahes-say-10-11-12-board-exam-not-postponed/
இதேபோல் சென்னையிலும் பேருந்துகள் சீராக இயக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.