தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு பணியிடங்களில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதில், கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர், மேலாளர், முதுநிலை அலுவலர், உதவி மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில நிருபர், கணக்கு அலுவலர், உதவி இயக்குநர், வேளாண் உதவி அலுவலர், நிதியாளர், உதவி பொது மேலாளர் என 20 வகையில் கீழ் 118 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
ஒரு முறைப்பதிவு மூலம் பதிவுக் கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி. பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு முறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை செல்லுபடியாகும்.
கணினி வழியில் பதிவு செய்யும் பொழுது, பத்தாம் வகுப்பு (SSLC) பதிவு எண், சான்றிதழ் எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மாதம், பயிற்று மொழி மற்றும் சான்றிதழ் வழங்கிய குழுமம் ஆகியதகவல்களைச்சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: இசைக்கலைஞர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- முழு விவரம் உள்ளே..
www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.பிறந்ததேதி, தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது தமிழ்நாடுமேல்நிலைக்கல்விவாரியத்தால் வழங்கப்படும் முறையே பத்தாம் வகுப்பு (SSLC) அல்லதுபன்னிரெண்டாம்வகுப்பு(HSC) மதிப்பெண் பட்டியலுடன் சரி பார்க்க வேண்டியது அவசியம்.
தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள் எழுத்துத்தேர்விற்குத்தேர்வுக் கட்டணமாக ரூ. 200 கணினி வழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.