gothandarama temple -சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் அச்ச உணர்வுடன் இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்த கருத்துக்கு அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் திருமதி. லக்ஷ்மி ரவி சாமி தரிசனம் செய்தனர்.
இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
“இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன்.
இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது.
இதையும் படிங்க :http://MNM Party | ”அவசர செயற்குழு கூட்டம்..” கூட்டணி குறித்து வெளியான அறிவிப்பு!!
நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது,
அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தங்களுக்கு எந்த அடக்குமுறையும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு கோதண்டராமர் கோயில் அர்ச்சகர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749307739833340113?s=20
இது குறித்து கோயில் தலைமை அர்ச்சகர் மோகன் பாட்டாசாரியர் கூறியிருப்பதாவது : சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் கோயிலுக்கு (gothandarama temple) 8 மணி அளவில் ஆளுநர் வருகை புரிந்தார்.
அவருக்கு கோவில் வாளாகத்தில் தேவஸ்தானம் சார்பில் ஆளுநர் ரவி அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சாமி முன் சிறப்பு தரிசனம் செய்யப்பட்டது.
இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் அவர்க்கு பிரதாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர் தங்களுக்கு எந்த அடக்குமுறையும் இல்லை இன்று சிறப்பு பூஜை நடைபெறுவதால்
அதற்கான ஏற்பாடு செய்ய இரவு நாங்கள் தூங்கவில்லை, அதனால் முகம் சோர்வாக காணப்பட்டிருக்கலாம் தெரிவித்த அவர்,ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.