நாடாளுமன்றத்தை முடக்குவதால் மக்கள் பிரச்சனைகளைப் பேச முடியாமல் போகிறது எனத் தமிழிசை சௌந்தர ராஜன் (tamilisai soundararajan) தெரிவித்துள்ளார்.
சென்னை,அயப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்தியாலயா சீனியர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடக்கப்படுவது குறித்த கேள்விக்கு,நான் ஆளுநராக இருப்பதால் அரசியல் கருத்துக்களைச் சொல்ல முடியாது.
ஆனால் சாதாரண குடிமகளாக எனது கருத்து நமக்கு வேண்டிய விவாதங்கள் நடக்க வேண்டும், நமக்கு வேண்டிய மசோதாக்கள் நிறைவேற்றப் படவேண்டும்.
நாடாளுமன்றம் என்பது விவாதங்களை நடைபெறும் இடம் ஆனால் அந்த இடத்தை முடக்குவதால் மக்கள் பிரச்சனைகளைப் பேச முடியாமல் போகிறது எனத் தமிழிசை சௌந்தர ராஜன்(tamilisai soundararajan) தெரிவித்துள்ளார்.