Governor tour of Ooty : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு செல்வதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை மறுநாள் (30ஆம் தேதி) நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி மார்க்கமாக மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
இதையும் படிங்க : ஒரே டென்ஷன்.. புலம்பும் எதிர்கட்சிகள்! புன்சிரிப்பில் பாஜக..!
31-ந்தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்லும் ஆளுநர், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து நேரில் பார்வையிடுகிறார்.
1-ந்தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், 2-ந்தேதி குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கும், 3-ந்தேதி குந்தாவில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு செல்கிறார்.
4-ந் தேதி காலை 11 மணியளவில் ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு திரும்புகிறார்.
தமிழக கவர்னரின் பயணத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது
ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி ஊட்டிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தபோது தோடர் இன மக்கள் வசிக்கும் முத்தநாடு கிராமம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட்டார்.
பின்னர் 18-ந்தேதி சென்னை திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் 5நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு செல்கிறார் Governor tour of Ooty.
இதையும் படிங்க : ‘டார்ச் லைட்’ பிடிக்க மறுக்கும் மன்சூர் அலிகான்!