கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் அரசுப் பள்ளி மாணவர்கள் (road show) இருந்தாங்க கூறப்படும் நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாற்காக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்துகொண்டார். முன்னதாக கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சுமார் 2 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த ரோடு ஷோவில் பெரிய அளவில் மக்கள் வராததால் பாஜக தொண்டர்கள் பிரதமரின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்ததாக பல வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகிறது.
இதேபோல் பிரதமர் மோடி பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் 50 அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை (road show) சுட்டிக்காட்டி எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் . கல்வித்துறையிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.