TNPSC Group-4 | குரூப் 4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4ம் தேதி (இன்று) மதல் மார்ச் 6ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாைணயம் தெரிவித்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலா், வனக்காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளில் 6,244 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.
இதையும் படிங்க: போதைப்பொருள் புழக்கம் – தமிழக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்..!!
இதற்கான, இணையதள விண்ணப்பப்பதிவு ஜனவரி 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 28ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திங்கள்கிழமை முதல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வழியே (www.tnpsc.gov.in) திருத்தங்கள் செய்யலாம். அதேசமயம் புதிதாக தேர்வுக்கு யாரும் விண்ணப்பிக்க முடியாது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764526285207040234?s=20
எழுத்துத் தேர்வு ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ் தகுதித்தாள் 100, பொதுத் அறிவுத்தாள் 100 என ெமாத்தம் 200 வினாக்கள் என 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று டிஎன்பிஸ்சி(TNPSC Group-4) தெரிவித்துள்ளது.