தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் TNPSC Group-4 எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 7,247 மையங்களில் ( Group 4 exam ) இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
2024ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது .
தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் குரூப் 4 நிலை பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351
2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398, 2022ம் ஆண்டு அறிவிக்கையன் படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Also Read : மெக்சிகோவில் செல்ஃபி மோகத்தால் இளம் பெண் உயிரிழப்பு..!!
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, கடந்தாண்டை விட கூடுதலாக 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
TNPSC Group-4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், தேர்வர்களுக்குள் கடும் போட்டி நிலவும் . இதன்காரணமாகவே கட்- ஆப் மதிப்பெண் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது .
அதன்படி ஜூன் 9ம் தேதி இன்று காலை 9.30 முதல், பகல் 12.30 வரை இந்த தேர்வு நடைபெறுகிறது . ( Group 4 exam ) தமிழகம் முழுவதும் 7,247 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வினை பல லட்சம் பேர் எழுதுகின்றனர்.