பிரதமர் நரேந்திர மோடி குறித்து குஜராத் கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பிபிசி ஆவணப்படம் வெளியானது குறித்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட சம்பவம் இந்தியாவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம்:
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா திரையில் நிலையத்தில் அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி ரயில் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் மாநிலத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே கலவரம் வெடித்தது.
இந்த கவரத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட நிலையில்,பல்வேறு இடத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தி ஏராளமான இஸ்லாமியர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.மேலும் இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள்:
2002ம் ஆண்டில் தான் இந்த சம்பவம் நடந்த காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் அப்போதைய முதல்வராக இருந்தார் நரேந்திர மோடி.2 வாரங்களாக இந்த கொடூர சம்பவம் வன்முறையாக வெடித்ததில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன.அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர்.மேலும் 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
மேலும் இந்த சம்பவதிற்கு காரணம் அப்போதைய முதல்வராக பொறுபெற்ற நரேந்திரமோடி அரசும் மற்றும் பாஜகவினர் தான் என்று குற்றசாட்டு எழுந்தது.
இந்த கலவரம் தொடர்பாக 2000 வழக்குகளுக்கு மேல் உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யபட்டது.மேலும் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக விளங்கியது தொலைவபேசி ஆடியோக்கள் தான். இதை கொண்டு
33 முஸ்லிம்கள் கொலை வழக்கில் 31 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.
பாஜகவினர் கடும் கண்டனம்:
இந்நிலையில் தான் பிபிசியின் இந்த ஆவணப்படத்தில் ‛‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் வெளியானது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.மேலும் பிரதமர் மோடியை பிபிசி தவறான நோக்கத்தில் சித்தரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பையும் மீறி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக
பாஜவினர் கடும் விமர்சனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்களில் பரப்ப மத்திய அரசு தடை உத்தரவு:
ட்விட்டர், யூடியூப்பில் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மோடியை விமர்சித்து எடுக்கபட்ட ஆவணப்படங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது மட்டுமல்லாமல் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் சிலர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டும், சமூக வலைதளங்களில் பரப்பியும் வருகின்றனர். வருகின்றனர். இதனால் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு:
இதனை தொடர்ந்து சகோதரத்துவ இயக்கம் என்ற பெயரிலான மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை கடும் எதிர்ப்பை மீறி பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர். மேலும் இந்த படத்தில் எடுக்கபட்ட புகைபடங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‛‛Fraternity Movement எனும் மாணவர்கள் அமைப்பு வடக்கு கேம்பஸில் உள்ள ஷாப்பிங் காம்பளக்சில் அனுமதியின்றி திரையிடப்பட்டிருப்பது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.