இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1988ம் ஆண்டு கேரள பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., (ஓய்வு) அதிகாரியான இவர் மத்திய கூட்டுறவுத்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார்.
Also Read : விமானம் கவிழ்ந்து விபத்து – 18 பேர் படுகாயம்
காலியாக உள்ள மற்றொரு தேர்தல் ஆணையர் பதவிக்கு விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார் . புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நாளை பதவி ஏற்கிறார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதி்ர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு, தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.