திமுகவின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான் தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?என பாஜக கட்சி தலைவர் H.ராஜா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில்,பழனி மலை கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக கட்சியின் தேசிய செயலாளர் H ராஜா பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த H.ராஜா ,தமிழகத்தில் திமுக ஆட்சி இன்னும் ஒரு சில தினங்களில் கலைக்கப்படலாம். மிக பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்றுவதும்,30 நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையில் வைத்துள்ளதும் அவருக்கு என்ன ஆனது என்பதை யார்க்கும் தெரியாத அளவில் மறைத்து வைத்துள்ளது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழக முதல்வரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் தெரிவித்த H.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது.
தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? என தெரிவித்துள்ளார். மேலும் இவரது ட்விட் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.