பிரான்சில் பாரீஸ் நகரத்தில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.அந்த நகரத்தின் மிகவும் மோசமான வானிலை காரணமாக ரயில் மற்றும் விமானச் சேவை போன்றவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் மிகவும் அன்றாட தேவைகளுக்குச் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், மின்னல் தாக்கியதில் 15 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் ஈபிள் கோபுரம் மீது மின்னல் தாக்கியதாகவும் பெரிய அளவில் சேதம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சேதமடைந்த பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.