Hair Growth Tips : முடி உதிர்வ தடுத்து கருகருன்னு அடர்த்தியா வேகமா முடி வளர இந்த உணவுகளை மட்டும் சாப்டாலே போதும்…
தலைமுடி வளர உங்கள் அன்றாட உணவுகளில் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளையும் சேர்க்க வேண்டும். பீட்டா கரோட்டின் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியா செயல்படுது..
பழங்கள், காய்கறிகளில் இருக்கும் சிவப்பு- ஆரஞ்சு நிறமி தான் பீட்டா கரோட்டின்..
இந்த பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் என்னனென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க : வெயில் காலத்தில் ஆண்களுக்கும் ஸ்கின் கேர் முக்கியம்.. இத பண்ண மறந்துராதீங்க!
இனிப்பு உருளைக்கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டின்-ல் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இத ஆவியில் வேகவைத்து சாப்பிட்டு வருவதால் முடி உதிர்வதை தடுத்து நீளமான முடி வளர உதவி செய்கிறது.
தினமும் கேரட் சாப்பிட்டு வருவதால் முடி உதிர்தலை தடுத்து நீளமான முடி வளர உதவி செய்கிறது.
முலாம் பழத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் முடி வளர்ச்சியை ஊக்குவித்து.. கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
அடர் பச்சை காய்கறிகள் போன்று கீரைகளும் அதிக சத்துக்கள் கொண்டவை. இவற்றில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி உள்ளதால் உச்சந்தலைக்கு நன்மை செய்யும்.
கீரையில் இருக்கும் சத்துக்கள் குறிப்பாக கீரையில் உள்ள அயர்ன் தலைமுடி மயிர்க்கால்களின் ஆக்ஸிஜனேற்றத்தை உறுதி செய்து அதன் வளர்ச்சியை அதிகப்படுத்துது.
சிவப்பு நிறத்தில் இருக்கும் குடைமிளகாயில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது Hair Growth Tips.
இதையும் படிங்க : செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு : மே 15க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!